வேலூர், ராணிபேட்டை உள்பட 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர்கள் அறிவிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. பெரும்பாலான பள்ளிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (2ம் தேதி) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நீர்நிலைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று 2ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

The post வேலூர், ராணிபேட்டை உள்பட 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர்கள் அறிவிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: