* ஐசிசி தலைவர் ஆனார் ஜெய்ஷா
புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் பொறுப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா நேற்று ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து ஜெய் ஷா கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டியை உலகின் பல்வேறு புதிய நாடுகளுக்கு எடுத்துச் செல்வேன். 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் கிடைக்க பாடுபடுவேன்’ என்றார்.
* வார்ம் அப் போட்டியில் இந்தியா அபார வெற்றி
கான்பெரா: ஆஸியின், பிரைம் மினிஸ்டர்ஸ் 11 அணியுடன் வார்ம்அப் போட்டியில் மோதிய இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸி, ஒரு விக்கெட் இழந்து 21 ரன் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், இரு அணிகளும் தலா 46 ஓவர் ஆட வேண்டும் என நிரணயிக்கப்பட்டது.
பின் ஆடிய பிரைம் மினிஸ்ட்ர்ஸ் அணி, 43.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன் எடுத்தது. துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அபாரமாக ஆடி 97 பந்துகளில் 107 ரன் குவித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி, 46 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, சுப்மன் கில் 50 ரன் எடுத்தனர்.
* 2வது டெஸ்ட்டில் ஹேசல்வுட் இல்லை
அடிலெய்ட்: இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு பதில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் ஆஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸி அணிக்கு, 2வது டெஸ்டில் ஜோஷ் ஆடாதது பலத்த சரிவை ஏற்படுத்தும். 2வது டெஸ்ட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. ஜோஷ் ஹேசல்வுட், 8 பகல் – இரவு போட்டிகளில் ஆடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இந்தியா – ஆஸி இடையில் 2வது டெஸ்ட் வரும் 6ம் தேதி, அடிலெய்டில் துவங்குகிறது.
The post துளித்துளியாய்… appeared first on Dinakaran.