இதற்காக இந்திய விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். மாற்று வீரராக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வாகி உள்ளார். ககன்யாத்திரிகள் என்று இஸ்ரோவால் அழைக்கப்படும் இருவருக்கும் விண்வெளி செல்வதற்காக அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த பயிற்சி தற்போது நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சியின் போது, ஏவுதளத்தை பார்வையிடுதல், ஏவுதல் தொடர்பான ஆயத்த பணிகள், ஸ்பேஸ் எக்ஸ்சின் விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு உடையை அணிந்து சோதனை மற்றும் விண்வெளியில் அவர்களுக்கான உணவை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணியில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கருவிகள் என்னென்ன?என்பது தொடர்பான பயிற்சி தரப்பட்டது. விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்தல், அன்றாட செயல்பாடுகள் மற்றும் தகவல்தொடர்பு நெறிமுறைகளும் அவர்களுக்கு சொல்லித்தரப்பட்டது. விரைவில் இரண்டாம் கட்ட பயிற்சியில் இந்திய விண்வெளி வீரர்கள் ஈடுபடுவார்கள்.
The post சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய விண்வெளி வீரர்களின் முதல் கட்ட பயிற்சி நிறைவு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.