டெல்லியில் கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு

புதுடெல்லி: டெல்லி சட்டபேரவை தேர்தல் பிப்ரவரியில் நடக்க உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாளவியா நகர் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த அசோக் ஜா திடீரென கெஜ்ரிவால் மீது திரவத்தை வீசினார். இதையடுத்து கெஜ்ரிவால் அருகே இருந்த பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர். ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அசோக் ஜா பாஜ தொண்டர் என்று ஆம் ஆத்மி தரப்பில் கூறப்படுகிறது.

The post டெல்லியில் கெஜ்ரிவால் மீது திரவம் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: