தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 11ம் ஆண்டு துவக்க விழா

 

தஞ்சாவூர், நவ.30: தஞ்சை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் 11ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. மத்திய மாவட்ட தலைவர் கௌதம் தலைமை வகித்து, கொடியினை ஏற்றி வைத்தார். மாநில இணைச் செயலாளர்கள் ராம்மோகன், கார்த்திகேயன், மண்டல இளைஞர் அணி தலைவர் திருச்செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொது செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர், கோவி. மோகன் வரவேற்றார்.

மாநகரத் தலைவர் வெங்கட்ராமன், வட்டாரத் தலைவர் அன்பழகன் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட இளைஞர் அணி தலைவர், ஜெகதீஷ், மாவட்ட நிர்வாகிகள் உலகநாதன், சாம்பசிவம், மாநகர நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், காசிநாதன் ராமச்சந்திரன், மகளிர் அணி வளர்மதி, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண் பிரசாத், பாண்டியன், வாசுதேவன், அய்யப்பன், மருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 11ம் ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: