சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் பதினெட்டாம்படியில் போட்டோஷூட்: கேரள காவல்துறை நடவடிக்கை!

கேரள: சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் பதினெட்டாம்படியில் நின்று ‘போட்டோஷூட்’ நடத்திய 23 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்பவும் கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது. ஐயப்பன் கோயில் பதினெட்டாம்படியில் ஏற பக்தர்களுக்கு உதவும் பணியில் இருந்த காவலர்கள், கடந்த 25ம் தேதி பணியை முடித்துகொண்டு புறப்படும்போது அங்கு குழுவாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இது சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள புனிதம் மிக்க பதினெட்டாம் படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி விடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவினர் கடந்த சனிக்கிழமை பணி முடிந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பு, பதினெட்டாம் படிகளில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே, பதினெட்டாம் படிகளில் ஏறி சன்னிதானம் சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கோவில் பூசாரிகள்கூட கீழே இறங்கும்போது தங்கள் முகத்தை திருப்பி சன்னிதானத்தை நோக்கி பார்த்தபடியே பதினெட்டாம் படிகள் வழியாக இறங்குவார்கள். ஆனால், காவலர்கள் இந்த நடைமுறைக்கு மாறாக, கோவில் சன்னிதானத்தை நோக்கி முதுகை காட்டியபடி படிக்கட்டுகளில் நின்று போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்று பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

The post சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் பதினெட்டாம்படியில் போட்டோஷூட்: கேரள காவல்துறை நடவடிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: