துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிபோது சோகம் பைக் மீது லாரி மோதியதில் தாய், 2 மகன்கள் பரிதாப பலி: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம் நவ.28: காஞ்சிபுரம் அருகே உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியபோது, பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் தாய், 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (40). இவரது மகன்கள் மதன் (20), மனோஜ் (18). இவர்கள், 3 பேரும் பைக்கில் நேற்று காலை திருப்புட்குழியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். பின்னர், மாலை 5 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக திருப்புட்குழியிலிருந்து ஓச்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, தாமல் இந்திரா நகர் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற பைக்கின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு தாய் கஜலட்சுமி, மகன் மதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு போராடிய மனோஜை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமா உயிரிழந்தார். இதுகுறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியயைும் ஏற்படுத்தியுள்ளது.

The post துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிபோது சோகம் பைக் மீது லாரி மோதியதில் தாய், 2 மகன்கள் பரிதாப பலி: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: