காஞ்சிபுரம், நவ.28: காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் கலந்துகொண்டு, ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வு சான்றுகளை வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது: அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அனைவரும், நவம்பர் மாதத்தில் அவரவர்கள் பணிபுரிந்த அலுவலகங்களுக்கு சென்று உயிர்வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம், ஓய்வூதியர்களின் நலனுக்காக அவரவர் வீடுகளுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களில் 70 ரூபாய் கட்டணமாக செலுத்தி உயிர்வாழ்வு சான்றினை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பணிபுரிந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் எண் மற்றும் கைபேசி எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை கொடுத்து 5 நிமிடங்களில் உயிர்வாழ்வு சான்று பெற்றுக்கொள்ளலாம்.
The post ஓய்வூதியர்களுக்கு அஞ்சலகங்களில் உயிர்வாழ்வு சான்று appeared first on Dinakaran.