தமிழ்நாட்டை நோக்கி வரும் ஃபெங்கல் புயல்: தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; நாளை வங்கக்கடலில் உருவாகும் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டை நோக்கி வரும் ஃபெங்கல் புயல்: தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: