அன்னவாசல் அருகே பிராம்பட்டி கிராமத்தில் கூட்டுறவு அங்காடி அமைக்க வேண்டும்

 

புதுக்கோட்டை,நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பிராம்பட்டியில் பகுதி நேர கூட்டுறவு அங்காடி அமைத்து தர வேண்டுமென அந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட அண்ணாவாசல் அருகே உள்ள பிராம்பட்டியில் 120 குடும்ப மக்கள் வசிக்கும் நிலையில் அங்கு கூட்டுறவு அங்காடி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் மக்களின் நலம் கருதி மாவட்ட ஆட்சியர் அந்த கிராமத்தில் பகுதி நேர கூட்டுறவு அங்காடியை திறக்க வேண்டுமெனவும் தற்போது கூட்டுறவு அங்காடி இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழக்குறிச்சி சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மனு அளிக்க வந்த மக்கள் அப்போது தெரிவித்தனர்.

The post அன்னவாசல் அருகே பிராம்பட்டி கிராமத்தில் கூட்டுறவு அங்காடி அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: