இதில் தற்போது, கட்டண கழிப்பறையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், அந்த கழிவறை மூடப்பட்டுள்ளது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்துக்கு வெளியே ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையத்தையொட்டி இருந்த கழிவறையும் பராமரிப்பு பணிகள் என தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த இரு கழிவறைகளுமே மூடப்பட்டு உள்ளதால் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை தான் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். இங்கு ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிவறைகள் உள்ளன. ஆனால் பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளுமே இதை பயன்படுத்த வேண்டி இருப்பதால், காலை வேளையில் நீண்ட கியூவில் பொதுமக்கள் நிற்கிறார்கள். இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர். வடசேரி பஸ் நிலையத்தையொட்டி வேறு கழிவறைகள் இல்லை.
இதனால் பயணிகள் இயற்கை உபாதைக்காக பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. ஒரே நேரத்தில் இரு கழிவறைகளை இடித்து பராமரிப்பு பணி மேற்ெகாள்வதால் இந்த சிரமம் ஏற்படுகிறது. இனி அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர உள்ளன. அடுத்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அதிகம் பேர் குமரி மாவட்டத்துக்கு வருவார்கள்.
பஸ்களில் வருபவர்கள் வடசேரி பஸ் நிலையத்தில் இறங்கி தான், தங்களது வீடுகளுக்கு செல்வார்கள். புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. எனவே இதை கருத்தில் கொண்டு வடசேரி பஸ் நிலையத்தில் நடந்து வரும் கழிவறைகள் சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மேயர் மகேஷ் உத்தரவின் படி தற்போது கழிவறை சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. போர்க்கால அடிப்படையில் இதை முடிக்க வேண்டும் என்று மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். அவ்வப்போது பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தும் வருகிறார். டிசம்பர் 2 வது வாரத்துக்குள் நிச்சயம் பணிகள் முடிவடையும் என்றனர்.
The post வடசேரி பஸ் நிலையத்தில் 2 கழிவறைகள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.