ஏலத்திற்கு முன்பாக 10 அணிகளும் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. 70 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 204 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடிப்படை விலை ரூ.2 கோடியில் 81, ரூ.1.5 கோடியில் 27, ரூ.1.25 கோடி 18, ரூ.1 கோடியில் 23 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் ஏலத்திற்காக ரூ.110.50 கோடியை கையிருப்பு வைத்துள்ளது. சிஎஸ்கே ரூ.55 கோடி, ஆர்சிபி ரூ.83 கோடி, ஐதராபாத் ரூ.45 கோடி, லக்னோ ரூ.60 கோடி, குஜராத் ரூ.69 கோடி, டெல்லி ரூ.73 கோடி, ராஜஸ்தான் ரூ.41 கோடி, கேகேஆர் ரூ.51 கோடியுடன் களம் இறங்குகின்றன.
ஏலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பன்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்தின் ஜோஸ்பட்லர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ரிஷப் பன்ட், ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரூ.30 கோடி அளவிற்கு ஏலம் போகலாம் என முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அவரை ஏலம் எடுக்க அதிக தொகை வைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் போட்டிபோடும் என தெரிகிறது.
The post சவுதி அரேபியாவில் நாளை ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம்: ரிஷப் பண்ட்டை ரூ.30 கோடிக்கு எடுக்க போட்டி appeared first on Dinakaran.