தூத்துக்குடி, நவ. 23:தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருேகயுள்ள காசிலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிச்செல்வம் (25), இவர், நேற்று மதியம் பைக்கில் தூத்துக்குடி எப்சிஐ குடோன் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த தூத்துக்குடி 3வது மைல் 2வது தெருவை சேர்ந்த காந்தி மகன் கலைச்செல்வன் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக் மீது லோடுஆட்டோ மோதி விபத்துவாலிபர் பலி appeared first on Dinakaran.