மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஒப்பந்த பணிக்காலம் ஓராண்டாக குறைப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்டமேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது. இதுகுறித்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணிகள் இயக்குனர் உள்ளிட்ட மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகளுடன் அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து, 2 ஆண்டுகளாக இருந்த அரசு சாரா ஒப்பந்த பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று மருத்துவர்கள் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆண்டுக்கு 700 முதுநிலை பட்டதாரி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு சாரா பணியில் சேருகின்றனர். இதில் வெளிமாநில பட்டதாரி மருத்துவர்களும் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழக மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும். மேலும் மருத்துவர்களுக்கு அரசு விரைந்து பணி நிரந்தரம் செய்வதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

 

The post மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஒப்பந்த பணிக்காலம் ஓராண்டாக குறைப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: