பேஸ்புக் மூலம் இருவரும் பழகி வந்த நிலையில் இருவரும் நேரில் பார்க்காமல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி அந்த இளம்பெண் திடீரென நந்தகணேசை தேடி கருமத்தம்பட்டி வந்தார். கருமத்தம்பட்டி நால்ரோட்டில் இருந்து தனது காதலனுக்கு போன் செய்த அந்த இளம்பெண், தங்கள் மீதுள்ள காதலால், நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன், என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தகணேசிடம் கூறி உள்ளார். இதை நம்பிய நந்தகணேஷ் இளம் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அவரை தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், இந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். பெற்றோரும் தனது மகனுக்கு அழகான இளம்பெண் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்து மறுநாள் தங்களது குலவழக்கப்படி கோயிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில், திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமாகி 4 நாட்கள் ஆன நிலையில் உடுமலை டவுன் காவல் நிலைய போலீசார் உடுமலையில் இளம்பெண் மாயமானது தொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் குழந்தை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் கருமத்தம்பட்டியில் உள்ளதாக செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. உடுமலை டவுன் போலீசார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்றனர்.
உடுமலை போலீசார் கொண்டு வந்த பெண் புகைப்படத்தை கருமத்தம்பட்டி போலீசார் வாங்கி பார்த்தபோது கடந்த 4 நாட்களுக்கு முன் புதுமணப்பெண் அலங்காரத்தில் தாலி கட்டிக்கொண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அந்த இளம்பெண் தான் என உறுதி செய்து கொண்ட போலீசார், நந்தகணேஷ் வீட்டுக்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் நைசாக பேசி காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் அந்த இளம்பெண்ணை உடுமலை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பேஸ்புக் காதலால் திருமணம் செய்து கொண்ட நந்தகணேஷ் ஏமாற்றம் அடைந்து தனது பெற்றோருடன் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
The post குழந்தையை தவிக்க விட்டு பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்: போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து appeared first on Dinakaran.