ஒருமுனை மீட்டர்கள் 12 லட்சம் வாங்க பணி ஆணை

சென்னை: அதிகரித்து வரும் மின் மீட்டர் தேவையை சமாளிக்க 12 லட்சம் ஒருமுனை மீட்டர்கள் வாங்க தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பணி ஆணை வழங்கியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மின் இணைப்புகள் அதிகரித்து வருவதால் புதிய மீட்டர்களுக்கான தேவையை தொடர்ந்து இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால், தடையில்லா சேவை மற்றும் துல்லியமான மின் கணக்கீட்டை உறுதிசெய்ய நிலையான மீட்டர் விநியோகம் அவசியம். அந்த வகையில் 6 வட மாநில நிறுவனங்களிடம் இருந்து, 12 லட்சம் ஒருமுனை மீட்டர்கள் வாங்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறைந்த அளவில் மீட்டர் வழங்குனர்கள் இருப்பதால், வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களிடமிருந்து இந்த மீட்டர்கள் வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஒருமுனை மீட்டர்கள் 12 லட்சம் வாங்க பணி ஆணை appeared first on Dinakaran.

Related Stories: