மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி : மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் காலியிடம் 9ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2016 ஏப்., 7ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.கிருஷ்ணகுமார், 2025 மே 21ல் ஓய்வு பெற உள்ளார்.பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த டி.கிருஷ்ணகுமாா், அரசமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.

The post மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: