அரூர் சந்தையில் பீன்ஸ் விலை சரிவு

அரூர், நவ.20: அரூர் வாரச்சந்தையில் ஓசூர், தளி, ராயக்கோட்டை பகுதியிலிருந்து வந்த காய்கறி வியாபாரிகள் வெண்டை, கத்திரி, பீன்ஸ், கேரட், காளிபிளவர் ஆகிய காய்கறிகளை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதத்தில் கிலோ ₹120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ், நேற்றைய சந்தையில் கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓசூர், தளி பகுதியில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

The post அரூர் சந்தையில் பீன்ஸ் விலை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: