சென்னை: ஆழியாறு அணையிலிருந்து 146 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக 20.11.2024 முதல் 15.04.2025 முடிய ஆழியாறு அணையிலிருந்து 146 நாட்களுக்கு 1089 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
அதேபோல கோயம்புத்தூர் மண்டலம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகையில் பொள்ளாச்சி கால்வாய் ”அ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ”ஆ” மண்டலம், சேத்துமடை கால்வாய் ”அ” மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ”அ” மண்டலம் ஆகிய புதிய பாசனப் பகுதிகளுக்கு 20.11.2024 முதல் 04.04.2025 முடிய 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஆழியாறு அணைலிருந்து 2112.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் சமமட்டக்கால்வாய் 0.000 கிலோ மீட்டரில் உள்ள மதகு வழியாக 597.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 2709.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள மொத்தம் 22116 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
The post ஆழியாறு அணையிலிருந்து 146 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.