அவதூறாக பேசிய வழக்கு: ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு குற்றப்பத்திரிகை நகல்

சென்னை: அவதூறாக பேசிய வழக்கில் வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.வி.எஸ். மணியன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சுமார் 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை போலீஸ் கடந்த அக்டோபரில் தாக்கல் செய்தது. அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்கள் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்.பி.வி.எஸ். மணியனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

The post அவதூறாக பேசிய வழக்கு: ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு குற்றப்பத்திரிகை நகல் appeared first on Dinakaran.

Related Stories: