குழுவில் இடம்பெற்றுள்ள பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று அந்த பகுதியில் நீர்வளத்துறை அதிகாரியுடன் மீட்புப் பணிகளில் மேற்கொள்வார்கள் என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி விரைவில், இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் குழுவினர் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன கட்டமைப்பு மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பாதிக்காத வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பணிகளுக்காக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் வெள்ள பாதிப்பு இடத்திற்கு செல்லும் நாட்கள் பணியில் உள்ள நாட்களாகவே கருதப்படும் என்றும் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
The post பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.