அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவிக்க தடை கோரி இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இபிஎஸ் குறித்து பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பிரதான வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

The post அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: