செம்பனார்கோயில், நவ.19: செம்பனார்கோயில் அருகே பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் புனிதநீராடி வழிபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலை அடுத்த பரசலூரில் திருப்பறியலூர் வீரட்டம் என்றழைக்கப்படும் பாலாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. அட்ட வீரட்டத்தலங்களில் நான்காவதாகவும், தேவாரத்தலங்களில் 104வது தலமாகவும் இக்கோயில் போற்றப்படுகிறது. இங்கு சிவபெருமானின் மாமனார் தட்சன் யாகம் செய்து வழிப்பட்ட கோயிலாகும் கூறப்படுகிறது. சிறப்பு பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தவாரி நடக்கும். நேற்று முன்தினம் கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.
விழாவையொட்டி பல்வேறு நறுமண பொருட்களை செலுத்தி சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு பால், தேன், சந்தனம், விபூதி, பழச்சாறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலைகள் அணிவித்து வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி, அம்பாள் மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து சாமியை கோயில் குளம் முன்பு எழுந்தருள செய்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் அஸ்திர தேவருக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது பக்தர்கள், கோயில் குளத்தில் புனித நீராடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில்
The post செம்பனார்கோயில் அருகே பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.