சிவகங்கை, நவ.19: சிவகங்கையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ளதலைமை ஆசிரியர் பணியிடங்களை மாணவரின் கல்வி நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி தமிழக அரசு கொள்கை முடிவு மூலம் நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல், ஊக்க ஊதிய உயர்வு பழைய முறைப்படி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட பொருளாளர் நவராஜ், மாநில துணைத்தலைவர் கோடீஸ்வரன், மாநில துணைச் செயலாளர் சிவாஜி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாமுவேல், மரியசெல்வி, வட்டாரச் செயலாளர்கள் வேல்முருகன், ஜஸ்டின் திரவியம், போஸ் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.