அவர்கள் மூவரும் தூய்மை காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில், புதூர் காலனி நிர்மலா (40), அம்மு (30) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். குபேந்திரன், மற்றொரு பெண் காயமின்றி தப்பினர். குபேந்திரன் மதுபோதையில் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில், காயமடைந்த 2 பெண்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்: சாலையில் நடந்து வந்த 2 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.