சில நாட்களில், என்னை காதலிப்பாக கூறினார். நானும், அவரது காதலை ஏற்றேன். இருவரும் பல இடங்களில் சுற்றித் திரிந்தோம். விரைவில், என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறினார். அப்போது, நான் பெற்றோரிடம் வந்து பேசுங்கள் என கூறினேன். விரைவில் எனது பெற்றோருடன் வந்து, உனது பெற்றோரை சந்தித்து பெண் கேட்கிறேன், என உறுதியளித்தார். இந்நிலையில், ஒரு நாள் நான் உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, என்னை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்த குருகுகன், வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி, என்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். மேலும், விரைவில் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி என்னை சமாதானப்படுத்தி விட்டு சென்றார். இதன் காரணமாக நான் கருவுற்றேன். இதுபற்றி குருகுகனிடம் கூறியபோது, சாதியை காரணம் காட்டி, திருமணத்திற்கு தனது பெற்றோர் சம்மதிக்க மறுக்கின்றனர். சிறிது காலம் காத்திரு. நான் அவர்களிடம் பேசி புரியவைத்து, சம்மதம் பெறுகிறேன், என கூறினார்.
மேலும், திருமணத்திற்கு முன், குழந்தை வேண்டாம், என கூறி என்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். இந்நிலையில், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதுகுறித்து, மகளிர் காவல் நிலைய போலீசார், குருகுகன் மீது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு, பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த குருகுகனை ேநற்று முன்தினம் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது appeared first on Dinakaran.