செங்கல்பட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 280 மனுக்கள் பெறப்பட்டன

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 280 மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை என பல்வேறு தரப்பில் 280 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1995 மதிப்புடைய பிரெய்லி கைகடிகாரம், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500 மதிப்பீட்டில் பிரத்யேகமாக திறன்பேசிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப நந்தினி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் ஹமீது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 280 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: