கோவூர் 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: கலெக்டரிடம் புகார் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோவூர் 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கோரிக்கை அனு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா தண்டலம், கோவூர் பகுதிக்கு உட்பட்ட இரண்டாம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை, நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கோவூர் பகுதிக்கு உட்பட்ட 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் உள்ளிட்டவை தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதில் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு சுகாதார சீர்கேடு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க உதவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோரிக்கை மனுவினை உடனடியாக குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

The post கோவூர் 2ம் கட்டளை பென்சில் ஒயிட் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: கலெக்டரிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: