தண்ணீர் + நகரம் என்ற நிலையை அடைய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

 

சென்னை, நவ.17: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் எஸ்பிஎம் (யூ) 2.0 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோகத் தண்ணீர் மற்றும் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலமாக முறையே மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறையை முழுமையாக சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மூலமாக பின்பற்றுவதனால் தண்ணீர் + நகரம் என்ற நிலையை அடைவதற்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள்ளாக solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

The post தண்ணீர் + நகரம் என்ற நிலையை அடைய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: