நிதி தர வளரும் நாடுகள் தயக்கம் பருவநிலை மாநாட்டின் முதல் வாரம் தோல்வி: இந்தியா விரக்தி

பாகு: அஜர்பைஜானின் பாகு நகரில் 29வது பருவநிலை உச்சி மாநாடு(காப்29) நடந்து வருகிறது. இம்மாநாடு கடந்த 11ம் தேதி தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ளது. மாநாட்டின் முதல் வாரம் முடிந்துள்ள நிலையில், இதில் பருவநிலை நிதி, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பருவநிலை நடவடிக்கைக்கான சமமான பொறுப்பேற்றல் ஆகியவை முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டன. இதில் வளர்ந்த நாடுகளின் முட்டுக்கட்டையால் முதல் வாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என இந்தியா விரக்தி தெரிவித்துள்ளது. வளரும் நாடுகளின் பருவநிலை நடவடிக்கைகளுக்கு உதவ 2020ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக கடந்த 2009ல் வளர்ந்த நாடுகள் உறுதி அளித்தன.

ஆனால் இந்த நிதி 2022ம் ஆண்டில் மட்டும் முழுமையாக தரப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிதி கடனாக மட்டுமே தரப்பட்டுள்ளதால் வளர்ந்த நாடுகளுக்கு கடும் நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டுகின்றன.
இதனால், பருவநிலை நிதியாக வளர்ந்த நாடுகள் 1.3 டிரில்லியன் டாலர்களை வழங்க வேண்டுமென இந்தியா, சீனா உள்ளிட்ட ஜி77 நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தி உள்ளன. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மறுப்பதால் மாநாட்டின் முதல் வாரம் தோல்வியில் முடிந்துள்ளது.

 

The post நிதி தர வளரும் நாடுகள் தயக்கம் பருவநிலை மாநாட்டின் முதல் வாரம் தோல்வி: இந்தியா விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: