அதன்பிறகே ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் ‘ஒர்ஃபிஷ்’ மீன் கரை ஒதுங்கியதால் மீண்டும் சுனாமியோ அல்லது பூகம்பமோ ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது கரை ஒதுங்கியுள்ள ‘ஒர்ஃபிஷ்’ மீனானது, தோராயமாக 9 முதல் 10 அடி நீளம் கொண்டதாக உள்ளது. வெள்ளி நிற மற்றும் அகலமான கண்கள் கொண்ட இந்த மீன், மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள மெசோபெலாஜிக் மண்டலத்தில் ஆழமாக வாழ்கின்றன.
இதுகுறித்து கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர் பென் ஃபிராபெல் கூறும்போது, ‘இந்த மீன்கள் எதற்காக செத்து மிதக்கின்றன என்று எனக்கும், மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்தால் நம்ப முடியாத உண்மைகள் வெளியாகிறது. கடலின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களால் அவை இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. ‘எல் நினோ’வால் ஏற்படும் மாற்றங்களால் இதுபோன்று நடக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த முறை, சான் டியாகோ நகரின் லா ஜொல்லா கோவ்வில் 12 அடி நீளம் கொண்ட ‘ஒர்ஃபிஷ்’ தென்பட்டது’ என்றார்.
The post கலிபோர்னியா கடற்கரையில் ‘ஒர்ஃபிஷ்’ மீன் கரை ஒதுங்கியதால் சுனாமி அச்சம்?: ஜப்பான் கோட்பாடு உண்மையா? appeared first on Dinakaran.