டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளது: 107 விமானங்கள் காலதாமதம்

டெல்லி: டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 800 மீட்டருக்கு குறைவான தொலைவையே பார்க்க கூடிய நிலை காணப்பட்டது. இந்நிலையில் டெல்லியில், புகைப்பனி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் 107 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றில் காலதாமதம் ஏற்படும் என்றும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களிலும் புகைப்பனி படர்ந்து காணப்படுகிறது. உள்ளூரில் ஏற்பட்ட காற்று மாசுபாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதில் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இவை, ஏற்கனவே காற்று மாசுபாட்டால் சிக்கி தவித்து வரும் டெல்லி மக்களுக்கு பரவலாக சிரமத்தை ஏற்படுத்தி உள்ளன. இன்று காலை 8 மணி நிலவரப்படி, டெல்லியில் காற்று தர குறியீடு 428 ஆக உயர்ந்து உள்ளது.

காற்று மாசு காரணமாக குறைவான தூரத்தையே பார்க்க முடிகிறது என்பதால் ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளது: 107 விமானங்கள் காலதாமதம் appeared first on Dinakaran.

Related Stories: