மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியில் உள்ள வருவாய் துறை எல்லைகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள், சென்னை மாவட்டத்தில் சேர்ந்தன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லையில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை பிரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான பணிகளை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், முதற்கட்டமாக 23 மண்டலங்களாக பிரித்தனர். பின், 24 மண்டலங்களாக இறுதி வரையறை செய்து, அரசின் ஒப்புதலுக்கு கடந்தாண்டு அனுப்பினர். ஆனால் நிர்வாக பிரச்சனை காரணமாக இந்த ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியுள்ளது, அதாவது, சென்னை மாநகராட்சியில் சட்டமன்ற தொகுதி வாரியாக மண்டலம் பிரிக்கும் திட்டம் நிதி பற்றாக்குறையால் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போதுதான் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நிதி பற்றாக்குறையால் சென்னை மாநகராட்சியை தற்போது விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post நிதி பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சி விரிவாக்க திட்ட பணி கைவிடப்படுகிறது: அதிகாரி தகவல் appeared first on Dinakaran.