செழித்து வளர்ந்த கொள்ளு செடிகள்

 

சூளகிரி, நவ.17: சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட மோதுகுளப்பள்ளி, கீரணப்பள்ளி, கே.என். தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், வெங்கடேசபுரம், நெரிகம். சின்னாரதொட்டி. பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி, அத்திமுகம், உத்தனப்பள்ளி, பெல்லட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதியில் போதுமான மழை பெய்ததால், கொள்ளு செடிகள் செழித்து வளர்ந்து காய்கள் பிடித்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர். தற்போது மார்க்கெட்டில் கொள்ளு கிலோ ரூ.135 முதல் ரூ.160 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனையாகிறது. நல்ல விளைச்சலும், விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post செழித்து வளர்ந்த கொள்ளு செடிகள் appeared first on Dinakaran.

Related Stories: