கிருஷ்ணகிரி, நவ.17: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெயிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக, சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். ஒருவருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பயிற்சி appeared first on Dinakaran.