உடுமலை, நவ11: திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உள்ள சட்டமன்றத் தொகுதி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக பாக முகவர்கள் கள ஆய்வு கூட்டம் நேற்று உடுமலை சின்ன வீரம்பட்டி பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் ஈஸ்வரசாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.
உடுமலை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் மாநில சுற்றுச்சூழல் அணி நிர்வாகியுமான மணி சுந்தர், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளருமான தமிழ்மறை ஆகியோர் பங்கேற்று தேர்தல் ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் மெய்ஞானம் மூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் சியாம் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.