வழித்தடம் கேட்டு மக்கள் சாலை மறியல்

 

பல்லடம், நவ.12: கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடம் மாதப்பூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் டிவைடர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதன் காரணமாக, சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பல்லடம் நோக்கி செல்ல வேண்டும் என்றால் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு ஊர் செல்லும் சாலையில் சென்று பின்னர் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவில் அருகில் சாலையை கடக்க விடப்பட்டுள்ள வழித்தடத்தின் வழியாக மீண்டும் பல்லடம் நோக்கி வர வேண்டிய நிலை ஏற்படும்.

இதனை தவிர்க்க தங்களது சமத்துவபுரத்திற்கு எதிரில் வழித்தடம் விட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்பகுதியில் 20 மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலையில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post வழித்தடம் கேட்டு மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: