கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை வலிப்பு நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை வரும் 17-ம் தேதி நடத்துகிறது. இம்முகாம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மேற்கு ரத வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையை சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் மற்றும் குழுவினர் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பொருத்தமான சிகிச்சை முறைகளைப் வழங்குவார்கள்.
இந்த முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். இம்முகாமை பற்றி விவரங்களை தெரிந்துகொள்ள 73393-33485 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். வலிப்பு நோய் என்பது உலகெங்கிலும் பொதுவாகக் காணக்கூடிய, அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய மூளையில் ஏற்படும் ஒரு நரம்பியல் நோயாகும். இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த நோய் உள்ளது. வலிப்பு நோய் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வையும் வேலை அல்லது தொழில் வாழ்க்கையையும் பாதிக்கும் தீவிரமான ஒரு நரம்பியல் பிரச்சினை ஆகும். வலிப்பு நோய் ஏற்பட காரணம் மூளையில் ஏற்படும் சீரற்ற அல்லது அசாதாரண மின்னதிர்வுகளால் வருகிறது. பரம்பரையாக உள்ள குறையினாலோ அல்லது மூளையில் ஏற்படும் காயம், பக்கவாதம் காரணமாக வலிப்பு நோய் வரலாம்.
இதனை ஆரம்ப நாட்களிலேயே கண்டறிந்தால் வெற்றிகரமாக குணப்படுத்தலாம். பெரும்பாலும் வலிப்பு நோயை மருந்துகளாலேயே குணப்படுத்திவிடமுடியும். சில வகையான வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை, உணவுப் பழக்க மாறுதல் முதலான மாற்று சிகிச்சை முறைகள் தேவைப்படும். 70 சதவீத வலிப்பு நோய்கள் மருந்துகளாலேயே குணப்படுத்திவிடலாம். எனினும் சில நோயாளிகளுக்கு வழக்கமான மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்த இயலாது.
அதுபோன்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வாழ்வியல் மாற்றம், நரம்பு தூண்டுதல், அறுவை சிகிச்சை முதலான சிகிச்சை முறைகள் அளிக்கப்படும். வலிப்பு நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலிய வசதிகள் தவிர கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோயாளிகளுக்காக வீடியோ இஇஜி கருவி வசதியும் உள்ளது.
The post கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பில் திண்டுக்கல்லில் வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.