நாகர்கோவில்: குமரியில் அதிகாரிகள் குளறுபடி காரணமாக அந்தியோதயா ரேசன் கார்டுகள் சாதாரண கார்டுகளாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஆயிர கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரியில் சுமார் 5.50 லட்சம் ரேசன் கார்டுகள் உள்ளன. தற்போது ரேசன் கார்டுகள் முன்னுரிமை கார்டுகள் அல்லது அந்திேயாதயா கார்டு (பிஹெச்ஹெச் ஏஒய்ஒய்) இந்த கார்டுகளுக்கு 35 கிலோ அரிசி, சீனி ரூ.13.50காசுகளுக்கு கிடைக்கும். முன்னுரிமையற்ற கார்டுகள் (என்.பி.ஹெச்ஹெச்) கார்டுகள் (இந்த கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்கள் கிகை்கும். என்பிஹெச்ஹெச் எஸ் வகை கார்டுகளுக்கு சீனி மட்டும் கிடைக்கும் என்பிெஹச்ெஹச் என்.சி கார்டுகளுக்கு எந்த பொருளும் கிடைக்காது. அடையாள அட்டையாக ரேசன் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், குமரியில் கடந்த இரு மாதங்களில் அந்தியோதயா கார்டுகள் சாதாரண கார்டுகளாக தானாக வகை மாற்றம் ஆகியுள்ளன. இதுபோல், அரசு அதிகாரிகள் சிலரின் கார்டுகள், வசதி படைத்தவர்கள் கார்டுகள் அந்தியோதயா கார்டுகளாக வகை மாற்றம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தியோதயா கார்டுகள் சாதாரண கார்டுகளாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கடந்த மாதம் வரை ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின் படி 35 கிலோ அரிசி வாங்கியவர்களுக்கு தற்போது 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கார்டு வகை மாற்றம் செய்யப்பட்டவர்கள் வட்ட வழங்கல் அலுவலகங்களி்ல சென்று மனுக்கள் அளித்து வருகின்றனர். இதுபற்றி வட்ட வழங்கல் அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ரேசன் கார்டுகள் வகை மாற்றம் நாங்கள் மேற்கொள்ள வில்லை.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணபிக்கும் போது, ஆதார் கார்டு, ரேசன் கார்டு இணைத்து விண்ணப்பித்தவர்களின் தகுதி பரிசீலனையை கம்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பு காரணமாக, நகைக்கடனாக 2 லட்சத்திற்கு மேல் வாங்கிருப்பவர்கள், அல்லது தொழில் தொடங்க வங்கி கடனுக்காக வருமான வரி செலுத்த தகுதி இல்லா விட்டாலும், ஐடி தாக்கல் செய்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிேலேய நிராகரிக்கப்பட்டன. அதன்படி, தற்போது அந்தியோதயா ரேசன் கார்டுகளும் தானாகவே சாதாரண கார்டுகளாக கம்யூட்டரில் வகை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்தியோதயா கார்டுகள் உள்ள வீடுகளில் ஆண் வாரிசுகள் இருந்து அவர்கள் வேலைக்கு சென்றாலோ, சொந்தமாக நிலங்கள் இருந்தால், அவர்களின் கார்டுகள் சாதா கார்டுகளாக மாற்றம் செய்யப்படும். அவ்வாறு இல்லாமல் இருந்தால், அவர்கள் மீண்டும் அந்தியோதயா கார்டாக மாற்ற விண்ணப்பம் செய்தால், வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கார்டை மீண்டும் அந்தியோதயா கார்டுகளாக வகை மாற்றம் செய்யலாம். அவர்கள் வங்கியில் நகை கடன் அல்லது ஐடி ேபான்றவை தாக்கல் ெசய்திருந்தால், அவர்கள் கார்டுகள் வகை மாற்றம் செய்ய வாய்ப்பு இல்ைல. எனவே கார்டு எதற்காக வகை மாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொண்டு விண்ணப்பிப்பது நல்லது என்றனர்.
இதனாலும் சிக்கல்
வருவாய்த்துறை அதிகாரிகள் மேலும், கூறியது, பெரும்பாலானவர்கள், கல்வி உதவித்ெதாகை, காப்பீடு உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஆண்டு வருவாய் 72 ஆயிரம் என குறிப்பிட்டு சான்று வாங்குகின்றனர். அதே நபர்கள் வங்கி கடன், வீடு கட்ட கடன் வாங்க 2.50 லட்சம் வருவாய் என விண்ணப்பித்து சான்று பெறுகின்றனர். இதுபோன்ற முரன்பாடுகளுடன் சான்று பெறுவதும் சலுகைகள் ரத்து ஆவதற்கு முக்கிய காரணமாகும் என்றனர்.
The post குமரியில் அந்தியோதயா ரேசன்கார்டுகள் சாதாரண கார்டுகளாக வகை மாற்றம் appeared first on Dinakaran.