சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி

சீர்காழி,நவ.15:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட அனந்தமங்கலம், திருக்கடையூர் ஊராட்சியில் வெள்ளக்குளம், நாராயணன்பிள்ளை சாவடி மற்றும் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட செம்பதனிருப்பு, காரைமேடு ஆகிய பகுதிகளில் சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை 45ஏ பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சீர்காழி அருகே சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை 45ஏ பணி திட்டத்தின்கீழ் ரூ.1905 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 55.5 கி.மீ.-க்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட அனந்தமங்கலம், திருக்கடையூர் ஊராட்சியில் வெள்ளக்குளம், நாராயணன்பிள்ளை சாவடி மற்றும் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட செம்பதனிருப்பு, காரைமேடு ஆகிய இடங்களில் கலெக்டர் மேற்கொண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அணுகுசாலை மற்றும் வேகத்தடை உள்ளிட்டவைகள் அமைப்பது தொடர்பாக கலெக்டர் விரிவாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.

மேலும், இத்தேசிய நெடுஞ்சாலை பணிகளில் சாலை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, இதர பணிகளை மேற்கொண்டு விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்

The post சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: