இந்த நடவடிக்கை தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வாட்ஸ்ஆப் அதன் தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை. அதோடு நமது அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றால், அதை நமது நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல வலைத்தளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை ஒன்றிய அரசு இதே போல் தடை செய்துள்ளது.
எனவே அந்த அடிப்படையில் வாட்ஸ்அப் செயலியையும் தடை செய்ய வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் அமர்வு விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post வாட்ஸ் அப்பிற்கு தடை கேட்ட மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.