ராஜஸ்தான் இடைத்தேர்தல் வன்முறை; தேர்தல் அதிகாரியை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம் தியோலி – உனியாரா சட்டப்பேரவை தொகுதிக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நரேஷ் மீனா சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். தியோலி – குனியாரா பேரவை தொகுதிக்குட்பட்ட சம்ரவ்தா கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடிக்கு வௌியே ஒருசில கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக நரேஷ் மீனாவும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரியான மல்புரா சப் கலெக்டர் அமித் சவுத்ரியை நரேஷ் மீனா கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து நரேஷ் மீனாவை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை வாகனங்கள் உள்பட 60 இருசக்கர வாகனங்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பதற்றம் நீடித்தது. நரேஷ் மீனாவை கைது செய்ய வலியுறுத்தி சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து நரேஷ் மீனா கைது செய்யப்பட்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 60 பேரும் கைது செய்யப்பட்டனர்.

The post ராஜஸ்தான் இடைத்தேர்தல் வன்முறை; தேர்தல் அதிகாரியை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: