லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் ரூ.200 கோடி முதலீடு : டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழ்நாட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் ரூ.200 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மருத்துவத்துக்கு தேவையான உயர்தர குழாய்கள், மருந்துகளை இரு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தயாரிக்க உள்ளன.

நரம்பு மண்டலம், இதயத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநுட்ப -குழாய்களை பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்கும். டயாலிசிஸ் சிகிச்சைக்கான குழாய்களையும் பாலிஹோஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிக்க உள்ளது. தமிழ்நாட்டை மருத்துவ தொழில்நுட்ப கருவிகளின் உற்பத்தி மையமாக மாற்ற இரு நிறுவனங்களும் முக்கிய பங்காற்றும். லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் மூலம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் ரூ.200 கோடி முதலீடு : டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: