இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 432 ஆக பதிவாகியுள்ளது. இது கடுமையான வகையின் கீழ் வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் காலையில் அடர்ந்த மூடுபனி நிலவியது.
இதற்கிடையே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன. புகையின் அடர்த்தி காரணமாக டெல்லி நகரம் முழுவதும் தெரிவுநிலையை குறைந்து, போக்குவரத்தைப் பாதிக்கப்பட்டது. அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் விமான நிலையங்களில் காலை 5:30 மணிக்கும், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் விமான நிலையம் காலை 7:00 மணிக்கும் அதிகபட்ச பாதிப்பு இருந்தது.
The post டெல்லியில் 2வது நாளாக அதிகரிக்கும் காற்று மாசு: புகை மூட்டத்தால் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.