நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் கீழ் பொன்னி சித்திரக் கடல் கூடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் கீழ் பொன்னி சித்திரக் கடல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் பழமை மாறாமல் புதுபிக்கப்பட்டது. இதனை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்டம் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் படைப்பாற்றல் திறமையை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்களின் ஓவியத் திறனை மேம்படுத்த நாகை நீலா தெற்கு வீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில், அதன் சிறப்புத் தன்மை குறையாமல் அப்படியே புதுப்பித்து பொன்னி சித்திரக் கடல் கூடம் என பெயரிடப்பட்டுள்ளது.
பொன்னி சித்திரக் கூடத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஓவியக் கலையின் அனைத்து வகைமைகளும் முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இம் மையமானது வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் ஓவிய ஆசிரியர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஓவியக் கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் கட்டப்பட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டித்தை திறந்து வைத்தார்.விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ முகம்மதுஷா நவாஸ், முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் லீனாசைமன், மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் தலா ரூ.5900 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கும். சலவைபெட்டி ரூ.6600 மதிப்பீட்டில் 1 பயனாளிக்கும், மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் 3 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் திருமண உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரமும், 1 பயனாளிக்கு ரூ.10 ஆயிரமும், இறப்பு நிவாரணமாக 1 பயனாளிக்கு ரூ.22 ஆயிரத்து 500-ற்கான காசோலையையும். முதியோர் குழுக்களுக்கான ஆதார நிதியாக 2 பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையினையும், முதலமைச்சரின் விரிவாக காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீடு அட்டையையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் வழங்கினார்.
கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், மாவட்ட எஸ் பி ஸ்டாலின், மாவட்ட ஊராட்சிக்குழத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், டிஆர்ஓ உமாமகேஸ்வரி, கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ். குத்தாலம் ஒன்றியக்குழுத்தலைவர் மகேந்திரன், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர்மன்றத்தலைவர் செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுண சங்கரி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சித்தலைவர் பூங்கொடி. மணல்மேடு பேரூராட்சித்தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சித்தலைவர் சங்கீதா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் மற்றும் அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட கல்வி தன் முனைப்புத் திட்டத்தின் கீழ் பொன்னி சித்திரக்கடல் கூடம் appeared first on Dinakaran.