திம்மாவரம் பகுதியில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்க மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: திம்மாவரம் பகுதியில் மின்கம்பத்தை சுற்றிலும் மரக்கிளைகள் பின்னி படர்ந்து காணப்படுகின்றன. இதனால் அக்கம்பத்தின் வழியாக செல்லும் மின்கம்பிகளிலும் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. அவற்றின் மூலம் அதிகளவு மின்விபத்துகள் நடைபெறும் வாய்ப்பு அதிகரிக்கின்றன. மின்கம்பத்தை வேறிடத்துக்கு மாற்றி சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு அருகே திம்மாவரம் குடியிருப்பு பகுதியில் ஒரு இணைப்பு மின்கம்பத்தை சுற்றிலும் ஒரேயொரு மரத்தின் கிளைகள் பின்னி பிணைந்து படர்ந்துள்ளன. இதனால் அந்த கம்பம் மற்றும் மின்கம்பியை சுற்றி படர்ந்துள்ள மரக்கிளைகளால் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன.

இக்கம்பத்தை சுற்றியுள்ள மரக்கிளைகளை அகற்றி, மின் பழுதுகளை சரிசெய்வதற்குள் ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனினும், அந்த மின்கம்பத்தை சுற்றிலும் படர்ந்துள்ள மரத்தினால் அப்பகுதியே அழகுற காட்சியளிக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தற்போது மழைக் காலம் என்பதால் மின்கம்பம் உடைந்து விழுந்தாலோ, பச்சை மரத்தினால் சூழப்பட்ட மின்கம்பத்தினால் அதிகளவு மின்சாரம் பாயும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக உள்ளனர். எனவே, இந்த மின்கம்பத்தை சுற்றிலும் உள்ள மரக்கிளைகளை அகற்றியோ, அல்லது அந்த மின்கம்பத்தை வேறொரு இடத்துக்கு மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post திம்மாவரம் பகுதியில் மின் விபத்து ஏற்படாமல் தடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: