சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடம்

துபாய்: அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் வெற்றியின் போது ஷாஹீன் அஃப்ரிடி மூன்று போட்டிகளில் 12.62 சராசரியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் அஃப்ரிடி 3 இடங்கள் முன்னேறி 696 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.

687 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2வது இடத்தில் உள்ளார். 674 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் 3வது இடத்தில உள்ளார். 665 புள்ளிகளுடன் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4வது இடத்தில உள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது ஷாஹீன் அஃப்ரிடி நம்பர்.1 பந்துவீச்சாளர் தரவரிசையில் இருந்தார்.

தற்போது மீண்டும் அந்த பிடித்துள்ளார். ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம்(825 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ள நிலையில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

765 புள்ளிகளுடன் ரோஹித் ஷர்மா 2வது இடத்திலும், 763 புள்ளிகளுடன் சுப்மன் கில் 3வது இடத்திலும், 746 புள்ளிகளுடன் விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.

 

The post சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: