வயநாடு மிகவும் பாதுகாப்பான, அழகான இடம்: மிகவும் நீளமான ஜிப்லைனில் பயணித்து மகிழ்ந்த ராகுல் காந்தி!!

வயநாடு: வயநாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜிப்லைனில் பயணம் செய்து மகிழ்ந்தார். வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றார். வயநாட்டின் வெள்ளரிமா பகுதியில் கேளிக்கை விளையாட்டுகள் நிறைந்த பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அங்கிருந்தவர்களிடம் உரையாடினர்.

பின்னர் அந்த மாநிலத்திலேயே மிகவும் நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணித்தார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு அங்கு சுற்றுலா மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளது. அச்சம் காரணமாக சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், வயநாடு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதை மக்கள் உணர வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வருகையால் வெள்ளரிமா பகுதிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கும் என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வயநாடு மிகவும் பாதுகாப்பான, அழகான இடம்: மிகவும் நீளமான ஜிப்லைனில் பயணித்து மகிழ்ந்த ராகுல் காந்தி!! appeared first on Dinakaran.

Related Stories: