ஏற்றுமதி வழிமுறை, சட்டதிட்டங்கள் குறித்து 3 நாட்கள் பயிற்சி முகாம்: தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் தகவல்

சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்த 3 நாள் பயிற்சி வரும் நவ.21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தில் நடைபெறும் இப்பயிற்சியில் ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள், சந்தையின் தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் //www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9080130299, 90806 09808 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஏற்றுமதி வழிமுறை, சட்டதிட்டங்கள் குறித்து 3 நாட்கள் பயிற்சி முகாம்: தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: