பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை போன்ற பயிற்சி பள்ளிகளை எல்லாம் புனரமைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பயிற்சி முடித்த 115 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 29 அர்ச்சகர்களுக்கு திராவிட மாடல் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறது. இதில் 11 திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், பொ.ஜெயராமன், செ.மங்கையர்க்கரசி, வான்மதி, ரேணுகாதேவி ஆகியோர் கொண்டனர்.
* திருவண்ணாமலை தீபத்திற்கு சிறப்பான முன்னேற்பாடுகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபப்பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் தலைமையில் அந்த மாவட்டத்தின் அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. எவ்வித சிறு அசம்பாவிதமும் இன்றி பக்தர்கள் மனநிறைவோடு மகிழ்ச்சி அடையும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினையும் நடத்தி காட்டுவோம். இந்தாண்டு தீபத் திருவிழாவிற்கு சுமார் 35 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.
The post அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த11 பெண்கள் உள்பட 115 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.